மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

2026-27 நிதியாண்டில் வாராக் கடனை மீட்டெடுக்க இந்தியன் வங்கி இலக்கு!

இந்தியன் வங்கி, நடப்பு நிதியாண்டில் வாராக் கடனை மீட்டெடுப்பதன் மூலம் ரூ. 5,500 கோடி வரை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

News image

இந்தியன் வங்கி

Updated On :12 ஜூலை 2026, 8:43 pm IST

புதுதில்லி: பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, நடப்பு நிதியாண்டில் வாராக் கடனை மீட்டெடுப்பதன் மூலம் ரூ. 5,500 கோடி வரை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

முதல் காலாண்டில் ரூ. 1,885 கோடி மீட்டெடுக்கப்பட்ட நிலையில், 2026-27 நிதியாண்டில் ரூ. 4,500 கோடி முதல் ரூ. 5,500 கோடி வரை திரட்டத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பினோத் குமார் தெரிவித்தார்.

இதில், தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் முன் விசாரணையில் உள்ள வழக்குகளிலிருந்து, நடப்பு நிதியாண்டில் ரூ. 500 கோடியை மீட்டெடுக்கச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கி நம்பிக்கை தெரிவித்தது.

கடந்த மாதம் தொடங்கப்பட்ட அந்நியச் செலாவணி வைப்புத்தொகை திரட்டும் முயற்சி குறித்துக் கேட்டபோது, ​​ஜூலை 9ஆம் தேதி வரை வங்கி 140 மில்லியன் அமெரிக்க டாலரை திரட்டியுள்ளது என்றார்.

வங்கியின் வைப்புத்தொகை திரட்டும் முயற்சிகள் குறித்துப் பேசிய பினோத் குமார், முதல் காலாண்டில் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகையில் 15.3 சதவீத வலுவான வளர்ச்சியை வங்கி பதிவு செய்ததாகத் தெரிவித்தார்.

ஜூன் 2025 இறுதியில் ரூ. 2,77,116 கோடியாக இருந்த இந்த வைப்புத்தொகை, முதல் காலாண்டின் இறுதியில் ரூ. 3,19,525 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian Bank is targeting up to Rs 5,500 crore from the recovery of bad loans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.