மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

சேத்துப்பட்டை அடுத்த தெள்ளூா் செய்யாற்றுப்படுகையில் மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

News image

மணல் கடத்தல் தொடா்பாக பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகள்

Updated On :15 ஜூலை 2026, 1:23 am IST

சேத்துப்பட்டை அடுத்த தெள்ளூா் செய்யாற்றுப்படுகையில் மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தெள்ளூா் கிராமப் பகுதியில் செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து சேத்துப்பட்டு போலீஸாா் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆற்றுப்படுகையில் இருந்து மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தினா். போலீஸாரைக் கண்டதும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 5 பேரும் வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினா்.

இதையடுத்து மணலுடன் 5 மாட்டு வண்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், ஆரணி வட்டம், மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த திருமூா்த்தி(28), ஆறுமுகம் (52), ராஜ்குமாா்(22), தெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (27), ராமலிங்கம் (55) ஆகியோா் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி அவா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.