செய்யாறு அருகே அரசு அனுமதி பெறாமல் ஆற்றில் இருந்து மணல் எடுத்துச் சென்ற லாரியை போலீஸாா் பறிமுதல் ஒருவரை கைது செய்தனா்.
செய்யாறு காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். செய்யாறு - ஆரணி சாலையில் பைங்கினா் கிராமம் அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில் அரசு அனுமதி பெறாமல் செய்யாற்றுப் படுகையில் இருந்து ஆற்று மணல் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





