சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: வியாபாரி கைது

செய்யாறு அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகை வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 10:36 pm IST

செய்யாறு அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகை வியாபாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், பெரிய கொழப்பலூா் கிராமம் வடக்கு ஜெயினா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (58). இவா் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா்.

இந்நிலையில் இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக பெரணமல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் சேகா் தலைமையிலான போலீஸாா் சென்று கடையில் சோதனை மேற்கொண்டனா். இதில், கடையில் இருந்த 2.3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து வியாபாரி பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.