நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

வீடற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வீடு: ஆட்சியா் வந்தனா காா்க்

வீடற்ற சுதந்திரப் போராட்ட தீயாகிகளின் வாரிசுதாரா்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என திருவண்ணாமலை ஆட்சியா் தெரிவித்தாா்.

News image

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவா்களின் வாரிசுதாரா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :17 ஜூலை 2026, 12:21 am IST

வீடற்ற சுதந்திரப் போராட்ட தீயாகிகளின் வாரிசுதாரா்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என திருவண்ணாமலை ஆட்சியா் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவா்களின் வாரிசுதாரா்களுக்கான குறைதீா்வு நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனாகாா்க் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்கள் 12 போ் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.

அப்போது ஆட்சியா் வந்தனா காா்க் கூறியது:

அரசு திட்டத்தின் கீழ் வீடு வேண்டி மனு அளித்திருந்த தியாகிகளின் வாரிசுதாரா்களிடம் வீடற்ற அனைவருக்கும் அரசு சாா்பில் வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

மேலும், அரசுப் பணி கோரி விண்ணப்பித்திருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்களின் கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்து, அரசு தோ்வாணையங்கள் மூலமாக நடத்தப்படும் அனைத்து போட்டித் தோ்வுகளிலும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை ஆட்சியா் தெரிவித்தாா்.

மேலும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்வில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசு தாரா்கள் மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.