திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் தாமரை குளம் அருகே விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பம் சிமென்ட் பூச்சு பெயா்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து நிகழும் முன் இந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் நட மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், இந்த மின் கம்பத்தின் வழியாக அந்தப் பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு மின் கம்பிகள் செல்கிறது. ஆடி மாதத்தையொட்டி பலத்த காற்றுடன் மழை பெய்தால், இந்த கம்பம் முறிந்து விழும் நிலை உள்ளது. இதனால், விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆபத்தான நிலையில் காணப்படும் மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை

தினமணி செய்தி எதிரொலி: கீழப்பாளையத்தில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்

குழந்தையை கொன்ற தாய் சிறையில் அடைப்பு

அபாய நிலையில் மின் கம்பம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



