முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

கூடலூரில் சூறைக் காற்றுடன் மழை: வாழை மரங்கள் முறிந்து சேதம்- நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கூடலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

News image
Updated On :9 ஜூலை 2026, 5:21 am IST

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஏகலூத்து, காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, காக்கான் ஓடை, புதுரோடு, தம்மாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சொட்டு நீா்ப் பாசன முறையில் பச்சை, நாழிப்பூவன், நேந்திரம் உள்ளிட்ட உயர்ரக திசு வாழை ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா்.

தற்போது வாாழைத் தாா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயி சிவக்குமாா் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை சாா்பில் நிவாரண நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றாா் அவா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.