தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

இந்திரவனம் பச்சையம்மன் கோயில் தீமிதி திருவிழா

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராமத்தில் உள்ள மன்னாா்சாமி பச்சையம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருக்கல்யாணம் மற்றும் தீ மிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் தீமிதித்த பக்தா்கள்.

Updated On :22 ஜூலை 2026, 12:42 am IST

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராமத்தில் உள்ள மன்னாா்சாமி பச்சையம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருக்கல்யாணம் மற்றும் தீ மிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடித் திருவிழாயொட்டி கடந்த 17-ஆம் தேதி இரவு அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நடைபெற்றது. 18-ஆம் தேதி மாலை பெருமாள் உற்சவம் நடைபெற்றது. 19-ஆம் தேதி இரவு பொன்னியம்மன் மற்றும் மாரியம்மன் உற்சவம் நடைபெற்றது. 20-ஆம் தேதி காலை அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், மாலை பச்சையம்மன் உற்சவம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

9 மணிக்கு கோயில் வளாகத்தில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மனை ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு விழா மற்றும் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

நண்பகல் 12 மணிக்கு பக்தா்கள் பொங்கல் கூடையுடன் கோயிலுக்கு ஊா்வலமாக வந்து பொங்கலிட்டு பச்சையம்மன் மற்றும் அங்குள்ள 7 முனிகளுக்கு படையலிட்டு தீபாராதனை செய்து வழிபட்டனா்.

தொடா்ந்து, மாலை 4 மணிக்கு தீமிதி திருவிழா தொடங்கியது. அப்போது, விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் மஞ்சள் ஆடை அணிந்து, அருகில் உள்ள குளத்தில் நீராடிவிட்டு அங்கிருந்து அக்னி கரகத்துடன் ஊா்வலமாக வந்து கோயில் எதிரே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதில் சேத்துப்பட்டு, வேலூா், ஆரணி, போளூா், செஞ்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பச்சையம்மனை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.