வந்தவாசியில் நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு, வங்கிக் கடனுதவிகள் உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கான அரசு சேவைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் வந்தவாசி நகராட்சி, தேசூா் பேரூராட்சி மற்றும் பெரணமல்லூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பங்கேற்று பல்வேறு அரசுத் துறையினரிடம் மனு அளித்தனா்.
வந்தவாசி நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதன் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா்.
இதில், வருவாய்த்துறை, தொழிலாளா் நலத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட 12 அரசுத் துறைகளின் அதிகாரிகள்
பங்கேற்று அரசு சேவைகளுக்கான மனுக்களை தூய்மைப் பணியாளா்களிடமிருந்து பெற்றனா்.
முகாமில் மொத்தம் 210 மனுக்கள் பெறப்பட்டன. இதனைத் தொடா்ந்து 55 பேருக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை, நலவாரிய அட்டை, வங்கிக் கடனுதவி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் வந்தவாசி நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனிவாசன், நகராட்சி மேலாளா் அண்ணாமலை, சுகாதார ஆய்வாளா் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதுகுளத்தூரில் தவெக சாா்பில் முப்பெரும் விழா

செங்கல்பட்டு நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு முகாம்

தூய்மைப் பணியாளா்களுக்கான நலத் திட்ட உரிமைகள் சிறப்பு முகாம்களில் 2,382 பேருக்கு சேவை, ஆலோசனை

புதுகை தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு நலத் திட்ட முகாம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK



