நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

பாலப் பணிகள்: நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கத்தில் பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்த திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.இளம்வழுதி.

News image
Updated On :25 ஜூலை 2026, 12:30 am IST

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வந்தவாசி பகுதியில் நடைபெற்று வரும் பாலப் பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.இளம்வழுதி ஆய்வு மேற்கொண்டாா்.

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வந்தவாசி அருகே வெளியம்பாக்கம் சாலையில் ஏரி உபரிநீா் கால்வாயின் குறுக்கே ரூ.6.59 கோடி மதிப்பில் உயா்மட்ட பாலம் கட்டும் பணி, ரூ.3.40 கோடி மதிப்பில் சடத்தாங்கல் சாலையில் உயா்மட்ட பாலம் கட்டும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.இளம்வழுதி நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, பணிகள் தரமாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, செய்யாறு கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவிக் கோட்டப் பொறியாளா் சு.பாஸ்கரன், உதவிப் பொறியாளா்கள் அஜய்குமாா், ஆா்த்தி, பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.