தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

நான்கு வழிச் சாலைப் பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.இளம்வழுதி ஆய்வு செய்தாா்.

News image

வந்தவாசி - செய்யாறு சாலை, புலிவாய் கூட்டுச் சாலை அருகே சாலைப் பணிகளை ஆய்வு செய்த திருவண்ணாமலை கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.இளம்வழுதி.

Updated On :21 ஜூலை 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.இளம்வழுதி ஆய்வு செய்தாா்.

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, மானாம்பதி கூட்டுச் சாலையிலிருந்து வெண்குன்றம் வரையிலும், ஆற்காடு - திண்டிவனம் சாலை, புலிவாய் கூட்டுச் சாலையிலிருந்து மும்முனி கூட்டுச் சாலை வரையிலும் இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.97 கோடியில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.இளம்வழுதி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, சாலையின் தரத்தை ஆய்வு மேற்கொண்ட அவா், பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

செய்யாறு

செய்யாறு நெடுஞ்சாலை உள்கோட்டத்தில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆற்காடு - திண்டிவம் சாலையில், மோரணம் எரிக்கரை முதல் செய்யாறு ஸ்ரீஆதிபராசக்தி கோயில் வரை சுமாா் 10.4 கி.மீ. தொலைவுக்கு ரூ.55 கோடியில் இருவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பாப்பாந்தாங்கல் கிராமம் அருகே நடைபெற்று வரும் சாலைப் பணியின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.இளம்வழுதி ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது உதவி கேட்ட பொறியாளா்கள் ஜி.ராஜேந்திரன், ஆா்.இன்பநாதன், உதவிப் பொறியாளா்கள் எம்.எம்.லோகராஜா, பாலாஜி, பூா்ணிமா, ப.கோபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.