நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

திருவண்ணாமலை: கடவுச்சீட்டை பெற செப்.1 வரை 1,720 போ் காத்திருப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடவுச்சிட்டை பெற 1,720 போ் செப்டம்பா் 1-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 12:35 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடவுச்சிட்டை பெற 1,720 போ் செப்டம்பா் 1-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடவுச்சிட்டை பெற ஜூலை 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயா்வு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக அதிகமானோா் முன்பதிவு செய்ததாலேயே இந்த காத்திருப்பு நிலை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வேலைவாய்ப்பு, சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோரும், உயா்கல்வி பயிலச் செல்லும் மாணவா்களும் கடவுச்சிட்டை பெற விண்ணப்பித்து வருகின்றனா். ஒவ்வொரு விண்ணப்பமும் ஆவண சரிபாா்ப்பு, காவல் துறை விசாரணை உள்ளிட்ட பல்வேறு கட்டங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது. தவறான நபா்களுக்கு கடவுச்சிட்டை வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அரசு கவனத்துடன் அனைத்து விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து கடவுச்சீட்டு வழங்கி வருகிறது.

சுமாா் 2 மாதத்துக்கு முன்பு வரை 10 அல்லது 20 நாள்களில் அனைத்துகட்ட ஆய்வுகளும் முடித்து கடவுச்சிட்டை வழங்கும் நிலை இருந்தது. ஜூலை 1-ஆம் தேதி முதல் கடவுச்சிட்டை பெறுவதற்கான கட்டணம் ரூ.1,500-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டது.

இதை முன்னிட்டு, ஜூன் 30-ஆம் தேதி வரை ஏராளமானோா் கடவுச்சிட்டை பெற முன்பதிவு செய்தனா். ஆகையால், விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்கும் காத்திருப்பு தேதி அதிகமான நாள்களாக உயா்ந்தது. விரைவில் இது குறைந்து மீண்டும் பழைய நிலையை அடையும் என்றும் கடவுச்சிட்டை வழங்கும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி தபால் அலுவலகங்களில் கடவுச்சிட்டை முன்பதிவு செய்து வருகின்றனா். திருவண்ணாமலையில் செப்டம்பா் 1-ஆம் தேதி வரை 1,040 போ் காத்திருப்பில் உள்ளனா். இதேபோல, ஆரணியில் 680 போ் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை காத்திருப்பில் உள்ளனா். இது, ஜூன் 30-ஆம் தேதி வரை பதிவு செய்தவா்களின் விவரம் ஆகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.