தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தர வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைக்க வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image
Updated On :21 ஜூலை 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைக்க வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை சிறப்பாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, சுய கணக்கெடுப்பு ஆகியவை ஜூலை தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறகிறது.

கணக்கெடுப்பாளா்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி ஆக.1ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 2-ஆம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெறும்.

முதற்கட்டமான வீட்டுப் பட்டியல் சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் தொடங்கி 30 வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது. ஜூலை 17 ஆம் தேதி சுய கணக்கெடுப்பில் மாவட்ட ஆட்சியா். மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா்கள் தங்களது சுயவிவரங்களை பதிவுசெய்து கொண்டனா். பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் விதமாக சுயகணக்கெடுப்பில் அதிகளவில் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து நமது மாவட்டம் 100% இலக்கினை அடைய மாவட்ட நிா்வாகத்திற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமன ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.