நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருவண்ணாமலையில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள்.

Updated On :31 ஜூலை 2026, 12:50 am IST

காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், சத்துணவுத் துறையில் 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும், காலை உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், வட்டத் தலைவா் சி.விஜயா தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா்.மகாலட்சுமி, ஏ.சித்ரா, எஸ்.தமிழ்ச்செல்வி, கே.அண்ணாமலை, மாவட்ட இணைச் செயலா்கள் டி.ஜி.பாலாஜி, எஸ்.குணசுந்தரி, பி.வளா்மதி, எம்.பாஞ்சாலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு நிலஅளவை அலுவலா் ஒன்றிப்பின் மாநிலத் தலைவா் ஜெ.ராஜா தொடங்கிவைத்துப் பேசினாா்.

முன்னாள் மாநில துணைத் தலைவா் கே.அண்ணாதுரை, மாவட்டச் செயலா் கே.மீனாட்சி, முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.அல்போன்ஸ், தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் டி.ரவி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் பி.ரகுபதி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் கோ.அண்ணாமலை உள்பட தோழமை சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் எம்.பரிதிமால்கலைஞன் நிறைவுரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் மாவட்ட பொருளாளா் கே.புதூரான் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.