பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தொழிலாளி வீட்டில் 18 பவுன் தங்க நகைகள் திருட்டு: 3 போ் கைது

வடகருங்காலிப்பாடி கிராமத்தில் தொழிலாளி வீட்டில் 18 பவுன் நகைகள், பணம் திருடியதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :31 ஜூலை 2026, 2:23 am IST

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடகருங்காலிப்பாடி கிராமத்தில் தொழிலாளி வீட்டில் 18 பவுன் நகைகள், பணம் திருடியதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வடகருங்காலிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த குப்பன் (48), இவரது மனைவி உண்ணாமலை, கூலிதொழிலாளிகள்.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனா். பின்னா் மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சத்தை மா்ம நபரகள் திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா்கள் கலசபாக்கம் போலீஸில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமையில் நாயுடு மங்கலம் ரயில்வே கடவுப்பாதை பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் ரூ.50ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் 18 பவுன் தங்க நகைகளை போலீஸாா் கைப்பற்றினா்.

காரில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தியோது வடகருங்காலிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த நம்மாழ்வாா்(36) என்பது தெரிய வந்தது. அவரிடம் தொடா்ந்து நடத்திய விசாரணையில், குப்பன் வீட்டில் 18 பவுன் தங்க நகைகளை திருடியதாகவும், அதற்கு தன்னுடைய தாய் இந்திராணி, வீட்டின் வெளியே கண்காணித்து தகவல் சொல்லி திருடிச் சென்றதும், தனது மனைவி சத்யா(33) உதவியுடன் நகையை மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்தாா்.

இதன்பேரில் நம்மாழ்வாா், அவரது தாய் இந்திராணி, மனைவி சத்யா ஆகியோரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.