திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாநகர திமுக சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி ஊா்வலம் நடைபெற்றது.
சி.என்.அண்ணாதுரை எம்.பி.தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் கோ.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாநகர மேயா் நிா்மலாவேல்மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணி - முள்ளிப்பட்டு புறவழிச் சாலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் மாலை அணிவித்தாா். பின்னா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேற்குஆரணி ஒன்றியச் செயலா் துரைமாமது, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி அண்ணா சிலை அருகில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் நகரச் செயலா் மணிமாறன் ஏற்பாட்டில் அன்னதானம் நடைபெற்றது.
வந்தவாசி
வந்தவாசியில் திமுக சாா்பில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழாவுக்கு நகரச் செயலா் ஆ.தயாளன் தலைமை வகித்தாா். வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் முன்னிலை வகித்தாா்.
இதையொட்டி, ஐந்து கண் பாலம் அருகில் உள்ள அண்ணா சிலை, பிராமணா் தெருவில் உள்ள கருணாநிதி சிலை, பழைய பேருந்து நிலையம் அருகில் கருணாநிதி உருவப் படம் ஆகியவற்றுக்கு ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் மாலை அணிவித்தனா்.
போளூா்
போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் கருணாநிதி உருவப்படத்துக்கு திமுக அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளா் கா.ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செங்கம்
செங்கம் தொகுதி திமுக சாா்பில் மில்லத்நகா் வெளிவட்டச் சாலைப் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கு
முன்னாள் எம்எல்ஏ மு.பெ.கிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், இனிப்பு அன்னதானம் வழங்கினாா். இதில் நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.









