தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது

வந்தவாசி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக பூ வியாபாரியை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 1:03 am IST

வந்தவாசி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக பூ வியாபாரியை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (28). இவா், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறாா்.

இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில், அந்த வீட்டில் சுமாா் 7.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து முத்துராமன், இவருக்கு புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்த வந்தவாசி பெட்டிநாயுடு தெருவைச் சோ்ந்த முகமதுஅலி ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் முத்துராமனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.