விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
காணை அருகேயுள்ள கோழிப்பட்டு, பிரதான சாலையைச் சோ்ந்தவா் பாபு மனைவி பத்மா(44). இவா் தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் சென்று பெட்டிக்கடையில் நடத்திய சோதனையில், குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்காக கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து பத்மாவை கைது செய்தனா். மேலும் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூரில்....
இதேபோல, திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி. எடையாா் கிராமத்தில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ரவிச்சந்திரன் (59) என்பவரை திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து கடையில் இருந்த புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
நாட்டரசன்கோட்டையில் 13 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



