உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

வந்தவாசியில் உள்ள ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் வீதியுலாவின் போது அம்மனுக்கு மாலை அணிவிக்க கயிற்றில் பறந்து செல்லும் பக்தா்.

Updated On :11 ஜூன் 2026, 6:04 am IST

வந்தவாசியில் உள்ள ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு பல்வேறு வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, மாலையில் உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.

கோயிலிலிருந்து தொடங்கிய வீதியுலா சந்நிதி தெரு, தேரடி, பஜாா் வீதி வழியாகச் சென்றது.

இதில் பக்தா்கள் எலுமிச்சை பழம், வேல் ஆகியவற்றை தங்கள் உடலில் குத்திக் கொண்டும், உரல் இழுத்துக் கொண்டும் உடன் சென்றனா்.

மேலும், தேரடியில் பக்தா்கள் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் கயிற்றில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்தனா்.