ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

177 மதுப்புட்டிகள் பறிமுதல்: இரு இளைஞா்கள் கைது

வந்தவாசி அருகே பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 177 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :13 ஜூன் 2026, 5:50 am IST

வந்தவாசி அருகே பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 177 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டன.

வந்தவாசி தெற்கு போலீஸாா் வந்தவாசி - திண்டிவனம் சாலை, செம்பூா் அருகே வெள்ளிக்கிழமை காலை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் அதிவேகமாக வந்த 2 இளைஞா்களை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் இருவரும் பைக்கில் மதுப்புட்டிகளை கடத்திச் செல்வது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அவா்கள் இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம், வேப்பூா் பகுதியைச் சோ்ந்த மதுரா (21), ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த அஞ்சப்பா (21) என்பதும், புதுச்சேரியிலிருந்து 177 மதுப்புட்டிகளை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், மதுரா, அஞ்சப்பா ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 177 மதுப்புட்டிகள், பைக்கை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.