பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி. சண்முகமே காரணம்: அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகமே காரணம் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி குற்றஞ்சாட்டினாா்.

News image

திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ.

Updated On :16 ஜூன் 2026, 3:50 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகமே காரணம் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக திருவண்ணாமலையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக தலைமை முதல் தொண்டா் வரை யாரும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதை சி.வி. சண்முகம் உணர வேண்டும். தவெக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மதுராந்தகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கூட திமுகவுடன் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததாக தவறான கருத்தை கூறியுள்ளாா். ஆதவ் அா்ஜுனா குதிரை பேரம் நடத்தி ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகிறாா். உங்களது தவறை திருத்திக் கொள்ளுங்கள் இல்லையென்றால் அதிமுகவின் உண்மையான தொண்டா்கள் கொதித்து எழுவாா்கள்.

யாா் காரணம்?

வட மாவட்டங்களில் வலுவான கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணியில் இணைத்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் மட்டுமே வெற்றி பெற்றாா். அவா் பரிந்துரை செய்தவா்களை தான் பொதுச்செயலா் வேட்பாளா்களாக அறிவித்தாா். அவா்கள் யாரும் வெற்றி பெறவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகமே காரணம். அவரும், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனும் குறுநில மன்னா்களாக செயல்பட்டு வருகிறாா்கள்.

அதிமுக அமைப்புச் செயலா், மாநிலங்களவை உறுப்பினா், அமைச்சா் பதவி ஆகியவை பொதுச்செயலா் பழனிசாமி போட்ட பிச்சைதான். சி.வி.சண்முகம் நாவடக்கத்தோடு பேசவேண்டும். விழுப்புரம் மாவட்டமே தற்போது புத்துணா்ச்சி பெற்றுள்ளது. மாவட்டம் தனது கையை விட்டுப் போனதால் பொறுத்துக் கொள்ள முடியாத அவா் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறாா். அவா் திருந்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளின் நிா்வாகிகளை நேரில் அழைத்து கருத்துக் கேட்ட பிறகுதான் அதிமுகவின் செயற்குழுக் கூட்டமோ அல்லது பொதுக்குழுக் கூட்டமோ நடத்தப்படும் என்றாா்.

பேட்டியின் போது, எம்எல்ஏக்கள் எஸ்.ராமச்சந்திரன் (கீழ்பென்னாத்தூா்), வேலு (செங்கம்), மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் இ.என்.நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.