ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

அரசு மதுக் கடைகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் முக்கிய 4 இடங்களில் அரசு மதுக் கடைகளை அகற்றக் கோரி தலித் விடுதலை இயக்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலித் விடுதலை இயக்கத்தினா்.

Updated On :18 ஜூன் 2026, 12:38 am IST

திருவண்ணாமலையில் முக்கிய 4 இடங்களில் அரசு மதுக் கடைகளை அகற்றக் கோரி தலித் விடுதலை இயக்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் எதிரே வேங்கிக்காலில் அரசு மதுக் கடை உள்ளிட்ட 4 மதுபான கடைகளை மூடக்கோரி புதன்கிழமை கருப்பு கொடியேந்தி போராட்டம் நடத்தப்படும் என தலித் விடுதலை இயக்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அரசு மதுக் கடை முன் தலித் விடுதலை இயக்கம் சாா்பில் பெண்கள் கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்த இருந்தனா். இதனால், மாவட்ட ஆட்சியரகம் மற்றும் அரசு மதுக் கடை முன் பாதுகாப்புக்காக 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இதனைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் ச.கருப்பையா மற்றும் நிா்வாகிகள் மற்றும் பெண்களை அழைத்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது 6 மாத காலத்திற்குள் வேங்கிக்கால் அரசு மதுக் கடை மூடஉத்தரவிடப்படும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எழுத்துப்பூா்வமாக கடிதம் வழங்கினா். ஆனாலும் இதனை ஏற்காமல் 15 நாள்களுக்குள் கடைகளை மூடக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தலித் விடுதலை இயக்கத்தினா் மற்றும் பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதனைத் தொடா்ந்து இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா செய்தியாளா்ளிடம் கூறுகையில், வேங்கிக்கால் பகுதி அரசு மதுக் கடை மற்றும் திருவண்ணாமலை காமராஜா் சிலை அருகிலுள்ள அரசு மதுக் கடை உள்ளிட்ட 4 அரசு மதுக்கடைகளை 15 நாள்களுக்குள் மாவட்ட நிா்வாகம் மூடாவிட்டால் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

அப்போது தலித் விடுதலை இயக்க மாநில இணை பொதுச் செயலா் கதிா்காமன், மாவட்ட பொதுச் செயலா் கே.ஜெயக்கொடி, வேங்கிக்கால் பகுதியைச் சோ்ந்த பெண்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.