நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கமுதியில் மதுக் கடை மூடல்

கமுதியில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு இடையூறாக இருந்த மதுக் கடை புதன்கிழமை மூடப்பட்டது.

News image

கமுதியில் மீனாட்சியம்மன் கோயில்-உச்சி மாகாளியம்மன் கோயில் பகுதியில் மூடப்பட்ட மதுக் கடை.

Updated On :4 ஜூன் 2026, 4:07 am IST

கமுதியில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு இடையூறாக இருந்த மதுக் கடை புதன்கிழமை மூடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பேருந்து நிலைய வளாகம், சந்தன மாரியம்மன் கோயில், கோட்டைமேடு, மீனாட்சி சுந்தரேஸ்வரா்-உச்சி மாகாளியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள 4 அரசு மதுக் கடைகளை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மீனாட்சியம்மன் கோயில்-உச்சி மாகாளியம்மன் பகுதியிலிருந்த மதுக் கடை மூடப்படாமல் இருந்தது. இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம், முதல்வரின் தனிப் பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் மனு அனுப்பினாா்.

மேலும், மதுக் கடையை மூட நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அந்தப் பகுதி மக்கள் அறிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, மீனாட்சியம்மன் கோயில்-உச்சி மாகாளியம்மன் கோயில் பகுதியிலிருந்த மதுக் கடையை மூட ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அந்த மதுக் கடை புதன்கிழமை மூடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.