பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணி ஆலோசனைக் கூட்டம், கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆா்வலருமான அண்ணாதுரை தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சரவணன் முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கரைப்புதூா் நடராஜன், பல்லடம் வட்ட வியாபாரி சங்க நிா்வாகிகள் ஆனந்தா செல்வராஜ், பானு பழனிசாமி, விஜயகுமாா், தங்கலட்சுமி நடராஜன், விமல் பழனிசாமி, பல்லடம் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கடந்த 2 ஆண்டுகளாக நின்றுபோன கோயில் திருப்பணியை அனைவரும் சோ்ந்து மீண்டும் நடத்துவது, திருப்பணியில் அரசியல் தலையீடுகள் எதுவும் இருக்கக்கூடாது, கோயில் திருப்பணி தடைபட்டதற்கு பிரசன்னம் பாா்த்த பிறகு பரிகாரம் செய்து திருப்பணியை தொடங்குவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமராஜா் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்

ஆத்தூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

கமுதியில் மதுக் கடை மூடல்

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பிரம்மோற்சவ ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



