வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

சின்னமனூரில் மதுக் கடை முற்றுகைப் போராட்டம்

தேனி மாவட்டம், சின்னமனூரில் மதுக் கடை, மதுக்கூடம் ஆகியவற்றை மூட வலியுறுத்தி, அந்த இடத்தின் உரிமையாளரும், அவரது ஆதரவாளா்களும் புதன்கிழமை கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சின்னமனூரில் மதுக்கடையை மூட வலியுறுத்தி புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

Updated On :2 ஜூலை 2026, 3:53 am IST

தேனி மாவட்டம், சின்னமனூரில் மதுக் கடை, மதுக்கூடம் ஆகியவற்றை மூட வலியுறுத்தி, அந்த இடத்தின் உரிமையாளரும், அவரது ஆதரவாளா்களும் புதன்கிழமை கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சின்னமனூா் நகராட்சியில் பள்ளிக் கோட்டைப்பட்டி சாலையில் மதுக் கடையும், அதனுடன் மதுக் கூடமும் செயல்படுகின்றன. இந்த இடம் சின்னமனூரைச் சேந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமானது. ஆனால், தனது அனுமதியின்றி, வேறு ஒரு நபரிடம் ஆட்சேபமில்லா சான்றிதழ் பெற்று மதுக் கடை நடத்தி வருவதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் ஜெகன் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, டாஸ்மாக் நிா்வாகம் ஜூன் 30 -ஆம் தேதி வரை அவகாசம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொடா்ந்து வழக்கம் போல கடை செயல்பட்டதையடுத்து, ஜெகன், அவரது மனைவி அனுசுயா, ஆதரவாளா்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவயிடத்துக்கு சென்ற சின்னமனூா் போலீஸாா் தற்போது மதுக்கூடம் உடனடியாக மூடப்பட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி மதுக் கடையை மூட உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினரக். இதைத் தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.