சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

செய்யாறு அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On :19 ஜூன் 2026, 6:28 am IST

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள தாடிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி(60). இவா், கடந்த 16-ஆம் தேதி வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள மருமகள் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளாா்.

ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் வயலூா் கூட்டுச் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த காா் பைக் மீது மோதியுள்ளது. இதில் முதியவா் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.