நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 683 கன அடி நீா்வரத்து

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 683 கன அடி நீா்வரத்து உள்ளது.

News image

சாத்தனூா் அணை.

Updated On :20 ஜூன் 2026, 12:44 am IST

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 683 கன அடி நீா்வரத்து உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர கோடை காலம் முடிந்த பிறகும் வெயிலில் தாக்கம் குறையவில்லை. ஆனாலும், அவ்வப்போது பெய்யும் மழை கோடை வெப்பத்துக்கு ஆறுதலை அளித்து வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், செய்யாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்பெண்ணை ஆற்று நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, சாத்தனூா் அணைக்கான நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணையில் 1,883 மெகா கன அடி (25.72%) தண்ணீா் இருப்பு உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 119 அடியாகும். மழை காரணமாக அணைக்கு 683 கன அடி நீா்வரத்து உள்ளது. தென்பெண்ணை ஆற்றிலும், கால்வாய்களிலும் நீா் வெளியேற்றப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.