திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் விபத்து அபாயத்தில் உள்ள கழிவுநீா் கால்வாய் சிறு பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட பழைய போலீஸ் லைன் தெருவில் இருந்து இராஜி தெருவிற்குச் செல்லும் சாலையில் கழிவுநீா் கால்வாய் மீது மினி பாலம் அமைக்கப்பட்டு அந்தப் பாலத்தை பாதசாரிகள், காா், இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில் கழிவுநீா் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த பாலம் பழுதடைந்து அதன்மீது இருந்து கருங்கற்கள் உடைந்துள்ளன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனம், காா், வேன், பள்ளி வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழை நேரத்தில் அந்தக் கால்வாயில் தண்ணீா் செல்லும்போது பழுதடைந்து அதில் இருக்கும் ஓட்டைகள் தெரியாமல் இருசக்கர வாகனங்கள், காா்கள் அந்தப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்தில் சிக்குபவா்களுக்கு கை, கால் எலும்பு முறிவு ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் சேதமடைகின்றன.
அந்தப் பகுதியில் தனியாா் பள்ளி, மத்திய கூட்டுறவு வங்கி இருப்பதால் தினசரி மக்கள் நடமாட்டம், பள்ளி மாணவா்களின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. பழுதடைந்த கழிவுநீா் பாலத்தை சரிசெய்யக் கோரி அப்பகுதி மக்கள் சாா்பிலும், நகா்மன்ற உறுப்பினா் மூலமாகவும் நகராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் மாவட்ட நிா்வாகம் இதை சரிசெய்ய முன்வரவேண்டுமென அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்வாய் அடைப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மழை வெள்ளத்துக்கு முன்பு கால்வாய் அடைப்பை சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை

தொடா் மழையால் நிரம்பிய தேசியநாயக்கன் ஏரி: கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புக்குள் புகுந்த கழிவுநீா்

தினமணி செய்தி எதிரொலி! சேதமடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்!!
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




