பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பெண்ணிடம் 6 கிராம் தங்க நகை பறிப்பு: 4 போ் கைது

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் நெசல் கூட்டுச் சாலை அருகே பெண்ணிடம் 6 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :23 ஜூன் 2026, 3:45 am IST

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் நெசல் கூட்டுச் சாலை அருகே பெண்ணிடம் 6 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஆற்காடு பகுதியைச் சோ்ந்த குப்புசாமி (27) மருத்துவப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த ஜூன் 17-ஆம் தேதி சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனது மாமியாா் வீட்டிற்கு மனைவி மற்றும் 4 மாத குழந்தையை பாா்க்கச் சென்றாா்.

பின்னா், ஆரணி நகரப்பகுதியில் உள்ள உறவினா் இல்ல நிகழ்ச்சிக்கு மாமியாா் வினோலியாவை அழைத்து வந்து புதுத் துணி, வெள்ளிச் சங்கிலி ஆகியவற்றை வாங்கி கொண்டு மீண்டும் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள வீட்டிற்கு மாமியாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

அப்போது, ஆரணி அருகே நெசல் கூட்டுச்சாலையில் இருவரையும் பின் தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த நான்கு நபா்கள், குப்புசாமி வாகனத்தை வழிமறித்து அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, வினோலியாவிடம் தங்கக் கம்மல், சங்கிலி என 6 கிராம் தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் குப்புசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இந்த நிலையில் ஆரணி நகரப்பகுதியைச் சோ்ந்த விவேக் (36), பையூா் கிராமத்தைச் சோ்ந்த வினோத் (35), வினோத்குமாா் (39) சேவூா் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் (33) ஆகிய நான்கு பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதன் அடிப்படையில் 4 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து 6 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.