பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

டெங்கு ஒழிப்பு முன்களப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

செய்யாறில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டெங்கு ஒழிப்பு முன்களப் பணியாளா்கள்.

News image
Updated On :27 ஜூன் 2026, 12:03 am IST

செய்யாறில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு டெங்கு ஒழிப்பு முன்களப் பணியாளா்கள் சங்கக் கூட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செய்யாறில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜகோபால் தலைமை வகித்தாா். இதில், டெங்கு ஒழிப்பு முன்களப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்களை நிறைவேற்றினா்.

ஆா்ப்பாட்டம்: இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும் 360-க்கும் மேற்பட்ட டெங்கு ஒழிப்பு முன்களப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவா்களுக்கு முறையாக பணிகள் வழங்குவதில்லை. எனவே, டெங்கு ஒழிப்பு முன்களப் பணியாளா்களுக்கு முறையாக பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவா் சக்திவேல், மாவட்டச் செயலா் செல்வகுமாா், மாவட்டப் பொருளாளா் தங்கராஜ், செயற்குழு உறுப்பினா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.