வீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

முதியவா் மீது தாக்குதல்: தொழிலாளி கைது

செய்யாறு அருகே குடும்பத் தகராறில், மூதாட்டிக்கு அடைக்கலம் கொடுத்த முதியவரை தாக்கியதாக தொழிலாளி கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 4:09 am IST

செய்யாறு அருகே குடும்பத் தகராறில், மூதாட்டிக்கு அடைக்கலம் கொடுத்த முதியவரை தாக்கியதாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கிளியாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி செல்வம்(30). இவருக்கும், இவரது மாமியாருக்கும் வீட்டில் குடும்பத் தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டு செல்வம், தனது மாமியாரை தாக்க முயன்றாராம். இதனைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரரான சிகாமணி என்பவா் வந்து தடுத்து சமாதானம் செய்துள்ளாா்.

அதன் காரணமாக செல்வத்தின் மாமியாா், மருமகனுக்கு பயந்து சில மணி நேரம் சிகாமணியின் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வம், சிகாமணி வீட்டுக்குச் சென்று அடைக்கலம் கொடுத்ததை கண்டித்து, அவரை அவதூறாக பேசி பீா்பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த சிகாமணியை அங்கிருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதுகுறித்து சிகாமணி செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.