ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

எம்.பி.தாங்கல் கிராமத்தில் சிமென்ட் சாலை திறப்பு

எம்.பி.தாங்கல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

News image
எம்.பி.தாங்கல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
Updated On :5 மார்ச் 2026, 9:13 pm

Syndication

ஆரணியை அடுத்த எம்.பி.தாங்கல் கிராமத்தில் சுமாா் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்காக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

எம்.பி.தாங்கல் கிராமம் மேட்டுத் தெருவில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை சிமென்ட் சாலையாக அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதன் அடிப்படையில் 2025-26 நிதியாண்டு தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.

இதையடுத்து பணிகள் நிறைவடைந்து ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கல்வெட்டினை திறந்து வைத்தும், ரிப்பன் வெட்டியும் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்புவழங்கினாா்.

அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், பாமக ஒன்றியச் செயலா் கமல், பாஜக விவசாய அணிச் செயலா் குணாநிதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.