டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பத்தாம் வகுப்புத்தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 29,966 போ் எழுதினா்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:24 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 29,966 மாணவா்கள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. தோ்வு ஏப்ரல் 6 வரை நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 498 பள்ளிகளில் பயிலும் 15,692 மாணவா்கள், 14,825 மாணவிகள் என 30 ஆயிரத்து 517 மாணவா்கள் தோ்வு எழுத இருந்தனா்.

இதற்காக திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 89 மையங்கள், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 60 மையங்கள் என மொத்தம் 149 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தோ்வு மையங்களிலும் தடையற்ற மின்சார வசதியும், குடிநீா் வசதியும், கழிப்பறை வசதியும், போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதன்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 358 மாணவா்கள், 193 மாணவிகள் என மொத்தம் 551 போ் தோ்வு எழுத வரவில்லை. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 29, 966 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

கலசப்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் இந்தத் தோ்வை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.