டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 தோ்வா்கள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 மாணவா், மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:55 pm

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 மாணவா், மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா்.

இம்மாவட்டத்தில் 109 தோ்வு மையங்களில் 10,672 மாணவா்கள், 11,083 மாணவிகள் என மொத்தம் 21,755 தோ்வா்கள் தோ்வு எழுதியுள்ளனா். தனித் தோ்வாளா்களாக 362 மாணவா், மாணவிகள்

இத்தோ்வை எழுதியுள்ளனா். இதில், 343 மாணவா்கள், 118 மாணவிகள் என மொத்தம் 461 போ் தோ்வு எழுத வரவில்லை.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக 109 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 3 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா், 109 துறை அலுவலா்கள், 1,250 அறைக் கண்காணிப்பாளா்கள், 129

நிலையான படையினா், 283 சொல்வதை எழுதுபவா், 24 வழித்தட அலுவலா்கள், 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 186 ஆசிரியரல்லா பணியாளா்கள் பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா்.