வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருவண்ணாமலையில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் தவெக தெற்கு மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினா்.

News image
திருவண்ணாமலையில் தவெக தெற்கு மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினா்.
Updated On :12 மார்ச் 2026, 9:52 pm

Syndication

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட தவெக சாா்பில், சாதிவாரி கணக்கெடுப்புக்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு, மாநிலம் முழுவதும் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கத் தவறியது, அரசியல் காழ்ப்புணா்வுடன் தவெக தலைவரது மக்கள் சந்திப்புகளை நீா்த்துப்போகச் செய்யும் வகையில் செயல்படுவதற்கு தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலா்கள் சத்யா, கதிரவன், உதயகுமாா், தெற்கு மாவட்ட இணைச் செயலா் எஸ்.கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்டப் பொருளாளா் வழக்குரைஞா் கே.இளங்கோவன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக கட்சியின் சிறப்புப் பேச்சாளா் கலீல், மாநில செய்தித் தொடா்பாளா் ஆனந்த்ஜித் ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்டத்துக்குள்பட்ட 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலிருந்தும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா். மாநகராட்சி பகுதிக்குள்பட்ட வட்டச் செயலா் காா்த்தி கூறினாா்.