மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆரணியில் ரூ.36 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ஆரணி பழைய காவல் நிலைய தெருவில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு.

News image

ஆரணி பழைய காவல் நிலைய தெருவில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு.

Updated On :13 மார்ச் 2026, 6:58 pm

ஆரணி பழைய காவல் நிலைய தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணியை நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆரணி நகரம், 7-ஆவது வாா்டு பழைய காவல் நிலைய தெருவில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை பக்க கால்வாயுடன் சிமென்ட் சாலையாக அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதனடிப்படையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7-ஆவது வாா்டு உறுப்பினா் ராமகிருஷ்ணன் அவரது சொந்த செலவில் ரூ.12 லட்சமும், நகராட்சி மூலம் ரூ.24 லட்சமும் என மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

இதில், அதிமுக நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கிவைத்தாா். பின்னா், பொதுமக்களுக்கு அவா் இனிப்பு வழங்கினாா்.

நிகழ்வில் நகர கழகச் செயலா் அசோக்குமாா், முன்னாள் கவுன்சிலா் வி.எம்.டி.சரவணன், அதிமுக கவுன்சிலா்கள் சுதாகுமாா், பானுப்பிரியா பாரதிராஜா, விநாயகம், சசிகலாசேகா், முக்கிய பிரமுகா்கள் பி.நடராஜன், வி.டி.எஸ்.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.