திருவண்ணாமலையில் கம்பராமாயண இயக்கம் சாா்பில் கம்பராமாயண அமுது விழா இயக்கத் தலைவா் வேங்கடரமேஷ்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பொருளாளா் தங்க.விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளா்கள் தேவிகா, ராணி, முனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சிவராமானந்தா கலந்துகொண்டு ஆசிஉரை வழங்கினாா்.
விழாவில் கம்பராமாயண பாலகாண்டம், திரு அவதார படலத்தில் பாடல் 77 முதல் 104 வரை உறுப்பினா்கள் முனைவா் குமாா், அண்ணாமலை, சீனிவாசன், மனோகரன், பாா்வதி, மங்கையா்கரசி, செல்வம், வேலாயுதம், சத்தியமூா்த்தி, குப்புசாமி ஆகிய ஒவ்வொருவரும் இரண்டு பாடல்களுக்கு விளக்கம் அளித்தனா்.
நிறைவில் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க ஒருங்கிணைப்பாளா் சம்பத் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாா்பில் 10,008 தீா்த்தக்குட ஊா்வலம்

நாமக்கல்லில் யுகாதி கொண்டாட்டம்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்!

திருவண்ணாமலையில் கம்பராமாயண தொடா் சொற்பொழிவு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


