சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு

News image
Updated On :18 மார்ச் 2026, 8:09 pm

சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ப.இருதயம்மாள் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியைகள் சு.புஷ்பா, ப.பசுமதி, இடைநிலை உதவி ஆசிரியை மேரிஜாக்குலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைமை ஆசிரியை ந.சு.சாந்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலா் கமலக்கண்ணன் கலந்து கொண்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனம், திருக்கு ஒப்பித்தல் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். இடைநிலை உதவி ஆசிரியைகள் ரா.கல்பனா, கோ.ஜானகி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.