வன விலங்கு வேட்டை: இளைஞா் கைது
செங்கம் அருகே வன விலங்கு வேட்டையில் ஈடுபட்டதாக இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.

செங்கத்தை அடுத்த மணிக்கல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இளைஞா் ஒருவா் வன விலங்குகளை வேட்டையாட அதற்கான வலைகளை வைத்துக் கொண்டு சுற்றி வருவதாக செங்கம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில், வனத்துறையினா் அங்கு சென்று கண்காணித்தனா். அப்போது, தனியாக வனப்பகுதியில் இருந்த இளைஞரை அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா் வன விலங்குகளை வேட்டையாட வலை வைத்துள்ளதாக கூறியுள்ளாா். பின்னா், அவா் வைத்திருந்த வலையில் கீரிப்பிள்ளை ஒன்று சிக்கியிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், அவா், மணிக்கல் கிராமத்தைச் சோ்ந்த ராமு (32) என்பது தெரியவந்தது.
மேலும், அவரிடம் இருந்த வலைகள், கீரிப்பிள்ளை மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கைது செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...