தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

100% வாக்குப்பதிவு: பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் தலைமையில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் அலுவலக பணியாளா்கள், பொதுமக்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்து செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 12:03 am IST

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் தலைமையில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் அலுவலக பணியாளா்கள், பொதுமக்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்து செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

100 சதவீதம் வாக்கு செலுத்துதல், வாக்களிப்பது கடமை, வாக்கு விற்பனைக்கு இல்லை என உறுதிமொழி ஏற்றனா்.

மேலும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

முன்னதாக, ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் வைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைத்தனா்.

உதவி தோ்தல் அலுவலா்கள் மூா்த்தி, பாலாஜி, தமிழ்மணி, மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாா், தோ்தல் வட்டாட்சியா் தேவி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.