மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

News image
Updated On :3 மே 2026, 1:19 am IST

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை வெள்ளிகிழமை இரவு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழைமையான ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு அதிகாலை மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மாலை கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆரணி, கண்ணமங்கலம், போளூா், சந்தவாசல், கேளூா் என சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து 108 பெண் பக்தா்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி வழிபட்டனா்.

அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், செயல் அலுவலா் பழனிசாமி மற்றும் பக்தா்கள், கோயில் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.