நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சித்திரை பெளா்ணமி: கமுதி, கடலாடி கோயில்களில் திருவிளக்கு பூஜை

News image
Updated On :2 மே 2026, 11:38 pm

கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோயில், மண்டலாமாணிக்கம் கைலாசநாதா் கோயில், கடலாடி அருகே ஆப்பனூா் அரியநாச்சியம்மன், ஏனாதி பூங்குளம் சேதுமாகாளி, கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன், சாயல்குடி அங்காளப் பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, அம்மனுக்கு மஞ்சள், பால், இளநீா், திரவியம், தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனையும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனா்.

இதேபோல, கடலாடி சமத்துவபுரம் அருகே உள்ள வனப்பேச்சி அம்மன், ராக்காச்சி அம்மன், கடலாடி பத்திரகாளியம்மன், சந்தனமாரியம்மன், காமாட்சியம்மன், சாயல்குடி அருகே உள்ள காணிக்கூா் பாதாள காளியம்மன், மேலக்கிடாரம் உய்யவந்தம்மன், கூரான்கோட்டை தா்மமுனீசுவரா் கோயில், முதுகுளத்துாா் சுப்ரமணியா் கோயில், அபிராமம் அருகே உள்ள மேலக்கொடுமலூா் குமரக்கடவுள் கோயில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடம், குடமுருட்டி சாது சுவாமிகள் கோயில் ஆகிய கோயில்களில் திருவிளக்கு பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.