வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கமுதி அருகேயுள்ள செந்தனேந்தல் அழகுவள்ளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :14 ஜூன் 2026, 1:01 am IST

கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செந்தனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அழகுவள்ளி அம்மன் கோயில் வைகாசி பொங்கல், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை அமைத்து 58-ஆவது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை விருதுநகா், புதுக்கோட்டை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 18 காளைகள், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு தலா 9 மாடுபிடி வீரா்கள்களமிறங்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளை உரிமையாளா்களுக்கும் குத்துவிளக்கு, கட்டில், ரொக்கப் பணம், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.