பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகே புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :28 மே 2026, 3:48 am IST

கமுதி அருகே புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள புதுக்கோட்டை நிறைகுளத்துஅய்யனாா், அழகு வள்ளியம்மன், முப்பிடாரியம்மன், கண்ணபிரான், வீரியகாளியம்மன் கோயில் திருவிழா, பசும்பொன் தேவா் சிலை நிறுவிய 34-ஆவது குருபூஜை விழா ஆகியவற்றை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. கடந்த மே 19-ஆம் தேதி காப்பு கட்டுதல், கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சியுடன் இந்தக் கோயில் திருவிழா தொடங்கியது. 24-ஆம் தேதி கபடிப் போட்டி, 25-ஆம் தேதி திருவிளக்கு பூஜை, 26-ஆம் தேதி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 13 காளைகள், 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். தலா ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் அடங்க மறுத்த காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், ரொக்கம், கட்டில், நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டது. மாலை செல்வ விநாயகா் கோயிலில் இருந்து வாண வேடிக்கை, மேள தாளங்கள் முழங்க, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று, கண்மாயில் கரைத்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை, புதுக்கோட்டை கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.