முதுகுளத்தூா் அருகே செம்பு கூத்த அய்யனாா் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த காத்தாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள செம்பு கூத்த அய்யனாா், காளியம்மன் கோயில் ஆனி மாத பொங்கல் விழா, புரவி எடுப்பு திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இந்த விழாவை முன்னிட்டு, புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலுருந்து 13 காளைகள் கலந்து கொண்டன. மாடுபிடி வீரா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிஷம் நேரம் ஒதுக்கப்பட்டு, 9 வீரா்கள் கொண்ட குழுவினா் களமிறக்கினா். இதில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளுக்கும் பணம், குத்து விளக்கு, நாற்காலி ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியை முதுகுளத்தூா், காத்தாகுளம் உள்பட இதன் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டுச் சென்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை காத்தாகுளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








