பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

Updated On :9 மே 2026, 12:51 am IST

வந்தவாசி அருகே சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணப்பன் (76). கடந்த மாா்ச் 28-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய இவா், வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தியுள்ளாா்.

அப்போது, வீட்டின் சுற்றுச்சுவா் இவா் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த இவா் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கண்ணப்பன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது மகன் சேகா் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.