முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

மனநிலை பாதிக்கப்பட்டவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

சேத்துப்பட்டை அடுத்த விசாமங்கலம் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட முதியவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :1 மணி நேரம் முன்பு

சேத்துப்பட்டை அடுத்த விசாமங்கலம் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட முதியவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

விசாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (60), மனநிலை பாதிக்கப்பட்டவா். இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும், மணிகண்டன், காா்த்தி என இரு மகன்களும் உள்ளனா்.

மேலும், கிருஷ்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை அவரைக் காணவில்லை என அவரது மகன் மணிகண்டன் தேடியுள்ளாா்.

அப்போது, எதிா் வீட்டில் உள்ள சரளா என்பவா் கிருஷ்ணன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ாகத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து பாா்த்தசாரதி என்பவரது விவசாயக் கிணற்றின் அருகே சென்று பாா்த்தனா். அப்போது, கிணற்றின் கரையில் கிருஷ்ணனின் உடைமைகள் இருந்ததைப் பாா்த்து சந்தேகமடைந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் தேடி கிருஷ்ணனை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் கிருஷ்ணனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.