மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.33 கோடி

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.4.33 கோடி கிடைத்தது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளா்ணமி நிறைவடைந்து உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

அந்த வகையில், சித்திரை பெளா்ணமி நிறைவடைந்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை கோயிலில் பல்வேறு இடங்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.

கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் பரணிதரன் மேற்பாா்வையில் நடைபெற்றது.

இதில் உண்டியல் காணிக்கையாக ரொக்கம் ரூ.4 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 935 ரூபாயும், தங்கம் 165 கிராமும், வெள்ளி 1.240 கிலோவும் கிடைத்துள்ளது என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.