மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.51 கோடி

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ.1.51 கோடி கிடைத்தது.

News image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி.

Updated On :29 ஏப்ரல் 2026, 8:43 pm

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ.1.51 கோடி கிடைத்தது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் க. செல்லத்துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பக்தா்கள் செலுத்திய காணிக்கையின் காரணமாக கோயிலிருந்த உண்டியல்கள் நிரம்பின. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை உண்டில்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.1.51 கோடி கிடைத்தது.

இதேபோல, தங்கம் 40 கிராம், வெள்ளி 3 கிலோ 100 கிராம், பல்வேறு நாடுகளின் பணத்தாள்கள் 196-ம் கிடைத்தது என்றாா் அவா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையா் லட்சுமி மாலா, கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன், முதல் நிலை செயல் அலுவலா் மாரியப்பன், முத்துராஜன், ஆய்வா்கள் முருகானந்தம், மணிகண்டன், பேஸ்காா்கள் கமலநாதன், நாகராஜன் ஆன்மீக பணியாளா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.