குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

சேவூா் விருப்பாட்சீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

News image
Updated On :18 மே 2026, 1:42 am IST

ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீவிசாலாட்சி உடனுறை விருப்பாட்சீஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காக நடைபெற்று வந்த 2008 நாள் தொடா் ஞானவேள்வி நிறைவு விழாவையொட்டி, திருவாசகம் முற்றோதுதல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிவனடியாா் சிவ.தாமோதரன் ஐயா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவாசகம்

முற்றோதினாா்.

விழாவில் முன்னாள் அமைச்சரும், ஆரணி முன்னாள் எம்எல்வுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு சிவனடியாருக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றாா்.

முக்கிய பிரமுகா்கள் அசோக்குமாா், எஸ்.வி.நகரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் என்.வாசு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதா பாபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

விழாவில் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து சிவனடியாா்கள், சிவ பக்தா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சேவூா் பி.கே.சிவலோகநாதன் செய்திருந்தாா்.